Name:
Location: San Jose, California, United States

Monday, September 13, 2004

மழையும்,மழை சார்ந்த பொழுதும்

காலையில் அலாரம் அடிக்கும்போதே மனது சந்தோஷமாக இருந்தது.அறையில் பரவியிருந்த மெலிதான குளிரும்,சோவென்ற இரைச்சலும் வெளியில் மழை பெய்துகொண்டிருப்பதை உணர்த்தியது.அப்பாடா..இன்று கொஞ்சம் தாமதமாக ஆபீஸ் போகலாம்.எப்படியும் எல்லோரும் தாமதமாகவே வருவார்கள்.எட்டரை மணி ஆபீசுக்கு,ஒன்பது,பத்து மணிக்குத்தான் வருவார்கள்.ஈரத்தை கால்மிதியில் துடைத்தபடி,குடையை உதறி மடக்கியபடி,நல்ல மழையில்லே?கொஞ்சம் லேட்டாயிடுச்சு என்றபடி.எழுந்து மெதுவாகவே தயாரானேன்.அரக்க,பரக்க இல்லாமல், மெதுவாக ஷேவ் செய்து,மெதுவாக குளித்து புறப்பட தயாரேனேன்.மழை இன்னும் நிற்கவில்லை.குடை இல்லை என்பது ஞாபகம் வந்தது.உடனே,மனதினில் மெல்லிய கவலை தோன்றிஔற்று.இந்த ஊருக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும்,இன்னும் குடை வாங்கவில்லை. இத்தனைக்கும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது நல்ல மழை பெய்யும். இன்றைக்கு எப்படியும் குடை வாங்கிவிடவேண்டும். இந்த உறுதிமொழியை, அநேகம் தடவை எடுத்தாயிற்று. முந்தாநாள்,கல்யாணிடம் சொன்னது ஞாபகம் வந்தது. இன்னிக்கு எப்படியும் குடை வாங்கிடுவேன் கல்யாண். நிச்சயமில்லாமல் பதிலுக்கு ஒரு பார்வை பார்த்தார். கடவுளே! இன்று மழையில் நனைந்தாலும் பரவாயில்லை.கல்யாண் பார்வையில் படாமல் இருக்கவேண்டும்.பார்வையிலேயே குடை என்னாயிற்று என்று கேட்பார். அவர் கேட்கிறாரோ இல்லையோ,என் மனசாட்சியே என்னைத்துளைத்தெடுக்கும்.

கீழ்த்தளத்திற்கு வந்து,அய்யர் மெஸ்ஸில் சாப்பிட்டு முடித்தபின்னரும் கூட மழை நின்றிருக்கவில்லை.மெஸ்ஸிலும்,மெஸ்ஸிற்கு வெளியிலும் நிறைய கூட்டம் இருந்தது.வேறு வழியில்லாமல்,இன்னொரு காஃபிக்கு சொல்லிவிட்டு காத்திருக்கையில் குடை வாங்காதது மகா தப்பு என்று மறுபடி உறுத்த ஆரம்பித்தது. அய்யோ,சீக்கிரம் ஆஃபீஸ் போனால், இந்த நாளை முழுமையாக அனுபவிக்கலாம். மழைநாள் அலுவலகம் ரம்யமானது.உடைகளில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்ட ஈரம், கார்ப்பெட் விரிப்பில் திட்டுத்திட்டாக இருக்கும் ஈர மண்,
சேர்களில் தொங்கவிடப்பட்ட ரெயின்கோட்டுகள், மூலைகளில் விரித்து வைக்கப்பட்ட குடைகள் என ஒரு குளிரான பதம் நிலவும். நம்ம ஊரில் இப்படி பெஞ்சா நல்லா இருக்கும் இல்லே? என எழும் குரல் சொந்த ஊரை இங்கே இழுத்து விடும். போன தடவை ஊருக்கு போயிருந்தபோது அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.இந்த ஊரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது,வாரத்திற்கு மூன்று மழை பெய்யும் என்றேன். நீதி,தருமம் தவறாத தேசம் போல என்று பதில் வந்தது. நிறைய பேர் உட்கார இடம் இல்லாமல் நின்றுகொண்டிருப்பதை பார்த்ததும், கவனம் கலைந்து, காஃபியை அவசரமாகக் குடித்துவிட்டு, வெளியில் வந்தேன்.
வெளியே வராந்தாவிலும், நிறைய கூட்டம் இருந்தது. எல்லோரும் என்னைப்போன்ற குடை இல்லாத ஆசாமிகள். ச்சே.. இன்னும் விடாப்பிடியாகக் கொட்டுகிறது. ஒரு ஐந்து நிமிடம் மெதுவாக தூறினாலும் போதும். பக்கத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடலாம்.

மழை வலுக்கவும்,கூட்டமும் அதிகமானது...எல்லோரும் இந்த நிமிடத்தை அனுபவித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றிற்று...சில முகங்களைத்தவிர. அதுவும் அலுவலததிற்கு நேரமாகிறதே என்ற கவலையாயிருக்கக்கூடும்.
சிலர் கண்களை மூடி சிகரெட்டை உள்ளிழுத்து புகையை மெல்ல விடுத்துக்கொண்டிருந்தார்கள். மழை கொட்டும் கருத்த காலை வேளை,கூட்டம், புகைமண்டலம் எல்லாம் சேர்ந்து ஒருவித திருவிழா போல இருந்தது. யாரும் யாரிடமும் பேசாத திருவிழாக்கூட்டம்.வெகுசிலர் மட்டுமே உரையாடியபடி இருந்தார்கள். சிலர் முன்வாசலுக்கு விரைந்து டாக்ஸிக்கு முயற்சித்தார்கள்.

பக்கத்திருந்த கடையில் சிகரெட்,குடை விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. காற்று சற்று வலுப்பதும்,மழைச்சாரல்களை வளைப்பதுமாக இருந்தது. சட்டென்று எல்லோரது கவனமும் அந்த ஜோடிமேல் திரும்பியது. இடதுபுற வளைவிலிருந்து வெளிப்பட்டார்கள்.. புதுமணத்தம்பதியாக இருக்கவேண்டும். மழையோ, கூட்டமோ அவர்களைப் பொருட்படுத்தவில்லை ரொம்பவும் நெருக்கமாக இதமாக அணைத்தபடி ஒரே குடையில் வந்ததுதான் அனைவர் பார்வையையும் ஈர்த்திருக்கவேண்டும். சிற்சிறு உரையாடல்களும் நின்றுபோக சட்டென்று அமைதியானது திருவிழா.
தம்பதி இப்போது வராந்தாவைக்கடந்து முன்பக்க வாசலை நோக்கி, நின்றிருந்த கூட்டத்திற்கு முதுகு காட்டியபடி கால்கள் பின்ன நடக்க, சில விஷமப் பேச்சுக்களும், சிரிப்புகளும் முளைத்தன..புகைமண்டலம் சட்டென்று பெரிதான மாதிரி தோன்றியது.. சற்றைக்கெல்லாம், மழையின் வேகம் குறையவும் ஸ்டேஷனை நோக்கி எட்ட ஆரம்பித்தேன்..முன் வாசலைக்கடக்கையில் கவனித்தேன். அந்த ஜோடி திரும்பவும் வீடு திரும்ப எத்தனித்திருந்த்து.

25 Comments:

Blogger தகடூர் கோபி(Gopi) said...

குடைக்குள் (மனசுக்குள்) மழை? :-)

September 20, 2004 at 3:25 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

தங்கம்,
அருமையான பதிவு. மழை நாளை ரசிப்பதற்கு வயது ஒரு பொருட்டே இல்லை! உங்கள் பதிவு மும்பையின் மழை நாட்களை எனக்கு ஞாபகப்படுத்தி விட்டது :-)
என்றென்றும் அன்புடன்
பாலா

December 8, 2004 at 4:27 AM  
Blogger Iyappan Krishnan said...

சின்ன சின்ன தூரல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன

பாடல் கேட்டிருக்கீங்களா...

மழையை ஆர்பாட்டம் இல்லாத வீதியில் யாரும் நம்மை பார்க்காத நேரத்தில்.. அல்லது வெட்ட வெளியில் நன்றாக நனைந்துக் கொண்டு அனுபவிக்க பிடிக்கும்.. சிலநேரம் ஜலதோசம் பிடித்துக் கொள்ளும் என்பது ... சல்தா ஹை..


அன்புடன்
ஜீவா

March 3, 2006 at 5:46 AM  
Blogger தங்ஸ் said...

Nanri Jeevs!

Enakku antha pattai vida, 'Jony' - 'Kaatril enthan geetham' romba pidikkum..

March 9, 2006 at 11:23 AM  
Blogger ஆடுமாடு said...

ஹலோ கதையை முடிக்கவே இல்லையே...

December 5, 2007 at 8:56 PM  
Blogger தங்ஸ் said...

நன்றி அண்ணாச்சி!
//ஹலோ கதையை முடிக்கவே இல்லையே...//
நான் வெறும் ஆர்வக்கோளாறு ஆசாமிங்க..நேத்து ஒரு டென்னிஸ் மேட்ச் பாத்ததுல இருந்து, டென்னிஸ் ப்ளேயர் ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன்..இப்ப என்ன சொல்றிங்க???

December 6, 2007 at 12:36 PM  
Blogger ஆடுமாடு said...

என்னங்க அடுத்தாப்ல ஒண்ணும் எழுதலையா?

December 13, 2007 at 3:52 AM  
Blogger தங்ஸ் said...

நன்றி அண்ணாச்சி,பின்னூட்டத்திலயே இன்னும் ட்ரெயினிங் போய்ட்டிருக்கு. இதுல பதிவு வேறயா??

December 13, 2007 at 7:29 AM  
Blogger ச. கோசல்ராம் said...

மழையில் நனைவது மகிழ்ச்சி... ஆனால் ஏனோ பெரியவங்க நம்மை மழையில் நனைய விடுவதில்லை. நீங்கள் குடை வாங்கிடாதீங்க... அப்பத்தான் மழை வரும்போது அதை ரசிக்க முடியும்...

January 20, 2008 at 12:03 AM  
Blogger தங்ஸ் said...

நன்றி கோசல்ராம்!
எனக்கு மழையில் நனைவதைவிட பெய்வதைப் பார்க்கப்பிடிக்கும்.

January 21, 2008 at 10:03 AM  
Blogger PPattian said...

படிக்கும்போது அப்படியே என்னை சுத்தி மழை பெய்வது போல இருந்தது. நல்லா எழுதறீங்க.. வாழ்த்துக்கள்.

January 23, 2008 at 8:15 AM  
Blogger தங்ஸ் said...

நன்றி புபட்டியன்..படத்துல இருப்பது நீங்களா?

January 23, 2008 at 10:39 AM  
Blogger Aruna said...

அழகு...அழகு...இந்த மழைப் பதிவு....
அன்புடன் அருணா

September 19, 2008 at 7:13 AM  
Blogger தங்ஸ் said...

வருகைக்கு நன்றி அருணா! கொஞ்சம் காற்றடித்தபடி பெய்யும்போது அதன் நடனம் ரொம்ப அழகு!

September 19, 2008 at 3:29 PM  
Blogger பழமைபேசி said...

அப்படிப் போடுங்க.... இதமாப் போட்டுத் தாக்குறீங்க... கடந்த காலத்துல உங்க விபரப் பட்டைக்கு வரும்போது வலைப்பூ ஒன்னும் இல்ல? அதான், இதப் பாக்காமலே விட்டுட்டன் போல இருக்கு....

November 7, 2008 at 5:19 AM  
Blogger தங்ஸ் said...

வாங்க பழமைபேசி..ஆமா,நாம எப்பவுமே சைலண்ட் கச்சேரிதான் பண்றது:-)

November 10, 2008 at 4:17 PM  
Blogger Sanjai Gandhi said...

இது கதையா நிகழ்வான்னு புரியலை தங்க்ஸ்.. ஆனால் கடைசி வார்தை வரைக்கும் அவ்வளவு அழகாய் இருந்தது.. படிக்க படிக்க அவ்வளவு அருமை.. வழக்கமாக சின்ன பதிவாக இருந்தால் நல்லா இருக்கும்னு தான் படிப்பேன். ஆனா இந்த பதிவு சின்னதாய் இருந்ததேன்னு கொஞ்சம் வருத்தம். அதைவிட வருத்தம் இவ்வளவு பெரிய இடைவெளியா புது பதிவுக்கு என்று நினைக்கையில்..

சீக்கிறம் புதுசோட வாங்க தலைவா.. :)

December 25, 2008 at 9:16 PM  
Blogger தங்ஸ் said...

வருகைக்கு நன்றி பொடியன்...கொஞ்சம் உண்மையான நிகழ்வுதான்..நமக்கு எப்பவுமே ஆரம்பிச்சு பாதில விடுற பழக்கம்...திரும்ப தொடர்வேனா-ங்கறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் அப்படின்னு சொல்ல ஆசை:-)

December 26, 2008 at 5:58 AM  
Blogger Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com

January 14, 2009 at 10:12 PM  
Blogger ஆடுமாடு said...

ஹலோ

January 15, 2010 at 10:40 PM  
Blogger தங்ஸ் said...

வாங்க ஆடுமாடு! ஹலோவோட நிறுத்திடீங்க

January 18, 2010 at 9:12 PM  
Blogger ஆடுமாடு said...

இனும எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?

ரொம்ப போரடிக்குதோ?
இல்லை வேலை அதிகமா?

February 7, 2010 at 4:25 AM  
Blogger தங்ஸ் said...

அன்புக்கு நன்றி ஆடுமாடு! கொஞ்சம் வேலைப்பளு அதிகம்..ஆனால் மற்ற வலைப்பூக்களை தவறாமல் வாசிக்கிறேன். உங்கள் கேரக்டர் கதைகளுக்கு நான் அடிமை..

February 10, 2010 at 12:07 PM  
Blogger ஆடுமாடு said...

அய்யா,
நம்ம ரெண்டு பேருக்கும் ஏதோ முன் ஜென்ம பந்தம் இருக்கும்னு நினைக்கிறேன்.
அதான், என் சம்பவங்களும் உங்கள் நிகழ்வுகளும் டச் ஆகிட்டு போகுது.

நன்றிஜி.

April 1, 2010 at 1:10 AM  
Blogger தங்ஸ் said...

ஆமாங்க ஆடுமாடுஜி..
எல்லா கிராமங்களிலும் சாமியாடி கதைகள், பேயோட்டி கதைகள், வாழ்ந்து கெட்டவர்கள்,ஆடுமாடுகள் என்ற பின்புலம் காரணமாக இருக்கலாம்

April 2, 2010 at 4:26 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Home Network
Home Network