Name:
Location: San Jose, California, United States

Wednesday, September 08, 2004

பொன்னியின் செல்வன்

சமீபத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்க நேர்ந்தது.அது ஒரு அற்புதமான அனுபவம்.படிப்பவர்களை பைத்தியம் பிடிக்க செய்யும் நாவல்.வேளைப்பளு காரணமாக தினமும் கொஞ்சம்தான் படிக்க முடிந்தது.ஒரு வழியாக மூன்று மாதங்களில் முடித்து விட்டேன்.அந்த மூன்று மாதங்களும் ஒருவிதமான மயக்க நிலையில் இருந்தேன்.எந்த நேரமும் அதே நினைப்பு.மனதில் ஓடும் எண்ணங்களும்,வார்த்தைகளும் தூய தமிழில் உருவகம் கொண்டன.அறை நண்பர்களுடன் பேசும்போது கூட தூய தமிழில் பேசினேன்.நாக்கு அடிக்கடி பட்டாபிஷேகம்,இராஜ்யம்,இளவரசர்,தேவி போன்ற வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு இருந்தது.காட்சிகளுக்கு ஏற்ப என்னை அதில் திணித்துக்கொண்டு முழுமையான ஆனந்தத்தில் திளைத்தேன்.என்னை வந்தியத்தேவனாக கற்பனை செய்துகொண்டு,குந்தவை பிராட்டியுடன் காதல் மயக்கத்தில் இருந்தேன். கடைசியில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் இதே மாதிரி உணர்ந்ததாக சொன்னார்.
ஒருவேளை இதை படமாக எடுத்தால் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு சிவாஜியைத்தவிர வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை...

11 Comments:

Blogger தகடூர் கோபி(Gopi) said...

http://www.chennainetwork.com/a/ebooks/ponniyinselvan.html என்ற சுட்டியில் பொன்னியின் செல்வன் பதிக்கப்பட்டுள்ளது (சில அத்தியாயங்கள் இல்லை)

September 9, 2004 at 12:54 AM  
Blogger Vanthiyathevan said...

வாருங்கள் குந்தவையாரே!

நானும் பொன்னியின் செல்வன் பைத்தியம் தான்! வலைப்பூவிற்கு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்கள்! நிறைவாக எழுதுங்கள்!

வந்தியத்தேவன்.

October 30, 2004 at 11:31 AM  
Blogger சீனு said...

நானும் பொ.செ.வின் ரசிகன் தான். இதை திரப்படமாக எடுப்பதை பற்றி என் கருத்தையும் பாருங்களேன்.

http://jeeno.blogspot.com/2005_11_10_jeeno_archive.html

January 25, 2006 at 12:29 PM  
Blogger தங்ஸ் said...

Nanri Gopi, Vanthiyathevan, Seenu!!

January 27, 2006 at 2:13 PM  
Blogger Iyappan Krishnan said...

project madurai யில் பொன்னியின் செல்வன் அனைத்துமே உள்ளது.

பொன்னியின் செல்வட்னுக்கு திரைப்பட நாயகர்களைத்தேர்வு செய்வதென்ற விளையாட்டா அம்மாடியோவ் .. அது பத்து நாளானும் தொடர்ந்து போய்ட்டே இருக்குமே.. ஆனா எவ்வளௌவ் தான் யோசிச்சாலும் ரெண்டுபேருக்கு சரியான ஆள் கிடைக்க மாட்டேங்கிறாங்க.

வந்தியத்தேவன் மற்றும் சருண்மொழித்தேவன்.

பொன்னியின் செல்வனுக்கென தனி குழுமமே இருக்கிறது ..

http://groups.yahoo.com/group/ponniyinselvan/


அன்புடன்
ஜீவா

March 3, 2006 at 5:41 AM  
Blogger தங்ஸ் said...

Varugaikku nanri Jeeva..I dont want anyone other than 'Sivaji' for both the charactors:-)

March 9, 2006 at 11:26 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கலைஞர் தொலைக்காட்சி ரெலிபிலிமாக எடுக்க இருப்பதாகப் படித்தேன்.

December 19, 2007 at 4:24 AM  
Blogger தங்ஸ் said...

வருகைக்கு நன்றி யோகன்..நானும் கேள்விப்பட்டேன். சொதப்பிவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.

December 19, 2007 at 7:55 AM  
Blogger ✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பொ.செ. இப்போதுதான் படிக்கிறீர்களா?
நீங்கள் 25 வயதுக்குள்ளிருந்தால்,தாமதமாக ஆரம்பித்திருக்கிறீர்கள்..
ஆனாலும் பொ.செ.படிப்பது வாசிப்புக்கு நல்ல துவக்கம்...

December 29, 2007 at 2:04 AM  
Blogger தங்ஸ் said...

வருகைக்கு நன்றி அறிவன்! மூணு வருசத்திற்கு முன்னால படிச்சேன்..அதுவே ரொம்ப லேட்..

December 29, 2007 at 9:22 AM  
Blogger Unknown said...

nanum ponniyin selvan padikkum podu
antha kaalathile iruppathu pola
oru feeling

vanthiyadevan - kamal than best

madavan kooda ok

May 23, 2009 at 4:12 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Home Network
Home Network